தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி - மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!!

Advertisement

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி - மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

*தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியான நபர்களிடமிருந்து (ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள்) வரவேற்கப்படுகின்றன.

*பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை ”www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org” என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

*தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET-UG) - 2025–ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.

*மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

*விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

*விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

*விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

*படிப்புப் பிரிவு : பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ்

*படிப்பிற்கான காலம் : 5½ ஆண்டுகள்

*படிப்பிற்கான கல்வித்தகுதி : 10 2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி);

*கல்லூரிகளின் விவரங்கள்:

• அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகள்-02, இருக்கைகள்-160,

• அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி-01, இருக்கைகள்-60,

• அரசு யுனானி மருத்துவக் கல்லூரி-01—இருக்கைகள்-60,

• அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி-01—இருக்கைகள்-50,

• சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள்-13, இருக்கைகள்-820,

• அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்-05, இருக்கைகள்-270,

• அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்-11—இருக்கைகள்-820,

*சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் ஒதுக்கீட்டு விவரங்கள்: அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு.

*இணையவழி விண்ணப்பக் கட்டணம்:

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்)

OC, BC, BCM, MBC/DNC பிரிவினர்

SC, SCA & ST பிரிவினர்

ரூ.500/- இல்லை

ரூ.1000/-

ரூ.1000/-

*அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 08.08.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.

*அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.

அறிவிக்கை நாள்: 24.07.2025

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் 24.07.2025 முதல்

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 24.07.2025 முதல்

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் 08.08.2025 மாலை 5.00 மணி வரை

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 08.08.2025 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 08.08.2025 மாலை 5.00 மணி வரை.

*பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் பட்டப்படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

Advertisement