சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜ-மஜத பாதயாத்திரை: பெங்களூருவில் தொடங்கியது
Advertisement
பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் பாஜ - மஜதவினர் பாதயாத்திரையை தொடங்கினர். பாஜ தலைவர்களுடன், மஜத இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமியும் கலந்துகொண்டார். பெங்களூருவில் நேற்று தொடங்கிய இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் 10ம் தேதி மைசூருவில் மாநாட்டுடன் முடிவடைகிறது. பாதயாத்திரை தொடங்கும்போது பேசிய முன்னாள் முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான எடியூரப்பா, ‘சித்தராமையா அவராகவே முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது நல்லது’ என்றார்.
Advertisement