எஸ்.ஐ தம்பதியின் மகளை காதலித்த சென்னை ஐடி ஊழியர் நெல்லையில் கொலை: வாலிபர் சரண்
சிகிச்சைக்கு பின்னர் மாலை 3 மணிக்கு மேல் தாத்தாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் கவின்குமாரிடம் தகராறு செய்து அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் ராஜபாளையம், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்.இன்ஸ்பெக்டர்களாக வேலை பார்க்கும் தம்பதியின் மகளும், கவின்குமாரும் தூத்துக்குடியிலுள்ள ஒரு பள்ளியில் படித்த போது நட்பாக பழகி வந்தனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதாம். இதனையறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் தூத்துக்குடியை விட்டு பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர்.
ஆனாலும் இளம்பெண்ணும், கவின்குமாரும் செல்போனில் அடிக்கடி பேசி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த இளம்பெண்ணின் தம்பி சுர்ஜித் (24) ஆத்திரமடைந்து, பாளை கேடிசி நகரிலுள்ள சித்த மருத்துவமனைக்கு சென்று தாத்தாவுடன் திரும்பி கொண்டிருந்த கவின்குமாரை நண்பருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று சுர்ஜித் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.