சியாச்சினில் பனிச்சரிவு 3 வீரர்கள் பலி
லே: லடாக்கில் உள்ள உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் ராணுவ முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கில் 3 வீரர்கள் பலியாகினர். 12,000 அடி உயரமுள்ள சியாச்சின் ராணுவ முகாம் பகுதியில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 அக்னிவீரர்கள் உட்பட 3 வீரர்கள் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கை உடனடியாக தொடங்கப்பட்டு சிக்கிய வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement