தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் வாங்கியதில் ஹவாலா பணப்பரிமாற்றம்? :நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

சென்னை: போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ​சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் பாரில் கடந்த மே மாதம் இரு தரப்​பினரிடையே நிகழ்ந்த மோதல் வழக்கின் தொடர்ச்சியாக போதைப்​ பொருட்​கள் வாங்கி பயன்​படுத்​தி​யது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

Advertisement

இந்த வழக்​கில் வெளி​நாட்டு கும்​பலுடன் பலருக்கு தொடர்பு இருப்​ப​தால், இதில் பல லட்​சம் ரூபாய் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்​ளிட்டோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் தடுப்பு சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணையை தொடங்​கினர். அந்த வகை​யில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்​.28-ம் தேதி​யும், நடிகர் கிருஷ்ணா அக்​.29ம் தேதியும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​ துறை அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு அதி​காரி​கள்

சம்​மன் அனுப்பி இருந்​தனர்.

ஆனால், ஸ்ரீகாந்த் நேற்று ஆஜராக​வில்​லை. இதற்​கிடையே, வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று ஸ்ரீ​காந்​த்​ ​சார்​பில்​ அமலாக்​கத்​ துறையிடம்​ கோரிக்​கை வைக்கப்பட்டது.இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஸ்ரீகாந்த் ஆஜராகாத நிலையில், வரும் 11ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Related News