தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமரால் கூற முடியாது: ராகுல் கருத்து

புதுடெல்லி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடியால் கூற முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.  இந்தியாவிற்கும், பாகிஸ்தானும் இடையில் ஏற்பட்ட போரை நிறுத்துவதில் பங்கு வகிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
Advertisement

டிரம்ப் மீண்டும் கூறுவது குறித்தும், இந்தியா 20 முதல் 25 சதவீதம் வரை அதிக அமெரிக்க வரிகளை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாகவும் கூறியது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய ராகுல்காந்தி, “டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் கூறவில்லை என்பது வெளிப்படையானது. என்ன நடந்தது என்பது தெளிவாக தெரிகிறது.

அவரால் இதனை கூற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இது தான் உண்மை. பிரதமர் அதனை சொன்னால் அவர் (டிரம்ப்) வெளிப்படையாக சொல்வார். உண்மையை சொல்வார்.அதனால் தான் பிரதமரால் எதுவும் சொல்ல முடியவில்லை. வர்த்தக ஒப்பந்தத்துக்காக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டிரம்ப் இந்த கருத்துக்களை சொல்கிறார். இப்போது எந்தவகையான ஒப்பந்தம் நடக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள்” என்றார்.

அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் பயன்படுத்தும் வார்த்தைகளை நீங்கள் கேட்டால் அவை தெளிவற்றவை என்பது தெரியும். அவர்கள் அதனை நேரடியாக கூற வேண்டும். அமெரிக்க அதிபர் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி சொல்ல வேண்டும். அதை அவர் நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும்” என்றார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘‘டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவதற்கான தைரியம் பிரதமருக்கு இல்லை” என்றார்.

Advertisement

Related News