விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (23.9.2025) விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்...
விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னை: விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களாக...
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பால பணிக்கான எஃகு கட்டமைப்புகள் தயாரிப்பு இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
ஹைதராபாத்: தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பால பணிக்கான எஃகு கட்டமைப்புகள் தயாரிப்பு இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பணியை விரைவில், தரமான முறையில் நிறைவு செய்யும் வகையில், முன்னோக்கிய கட்டமைப்பு...
உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக உத்தரவிட்ட விவகாரம் : விஜிலென்ஸ் பதிவாளர் அறிக்கை தாக்கல்!!
சென்னை : உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை...
சென்னை மாநகராட்சியில் ஏப் முதல் செப்.20 வரை ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!!
சென்னை: ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த 2024-2025-இல் ரூ.2,023 கோடி வசூலிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை அரையாண்டு வரிவசூல் நடைபெறுகிறது. அதனடிப்படையில் வரும் செப்.30-க்குள்...
தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
விருதுநகர்: 7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்; அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர்...
செப்.25, 27ல் நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை: செப்.25, 27ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்.26ல் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "நேற்று (22-09-2025)...
வளர்ப்பு பிராணி விவகாரத்தில் சண்டையிட்டுக் கொண்ட பக்கத்து வீட்டுக்கார்கள் : ஆசிரம குழந்தைகளுக்கு பீட்சா, மோர் தர ஐகோர்ட் நிபந்தனை
டெல்லி : டெல்லியில் வளர்ப்பு பிராணி விவகாரத்தில் சண்டையிட்டுக் கொண்ட பக்கத்து வீட்டுக்கார்கள் மீதான வழக்கை ரத்து செய்ய டெல்லி ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. டெல்லியில் பக்கத்து வீட்டுக்காரர்களின் வளர்ப்பு பிராணி தொடர்பான சண்டை காவல் நிலையம் வரை சென்றது. இதையடுத்து இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தங்கள் மீதான...
அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிப்பு..!!
உத்தரபிரதேசம்: அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிலில் மசூதி கட்டும் திட்டத்தை நிராகரித்தது தெரியவந்தது. பொதுப்பணி, உள்ளாட்சி, தீயணைப்பு துறைகளின் ஒப்புதல் பெறவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டது. மசூதி அறக்கட்டளை ரூ.4.02 லட்சம் விண்ணப்பத் தொகையை செலுத்தியதாக தகவல் வெளியானது. மசூதி கட்ட அரசு...