தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் அருகே பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டறியப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அன்னம்புத்தூரில் ஏரிக்குள் சன்னியாசிமேடு பகுதியில் பழமை வாய்ந்த ஐயனார் சிற்பம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்தனர். இந்த சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: அன்னம்புத்தூர் ஏரிக்குள் சன்னியாசிமேடு எனும் பகுதி இருக்கிறது. இதன் மீது கருங்கல்லில் தனிச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் சன்னியாசி சாமி என்று வணங்கி வருகின்றனர். இந்த சிற்பத்துக்கு உரியவர் ஐயனார் ஆவார். பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடனும், இடைக்கச்சை அணிந்தும் காணப்படும் ஐயனாரின் இடுப்பில் குறுவாள் இருக்கிறது.
Advertisement

காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும் இடது கையை தொடை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும் இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் இவர் அமர்ந்து இருக்கிறார். வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும் பூரணி பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்ட எதுவும் இந்த சிற்பத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் காலத்தால் முற்பட்ட சிற்பமாக இது இருக்கலாம். இதன் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட ஐயனார் சிற்பங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று இங்கு காணப்படுகிறது. மேலும் சிவாலய வளாகத்தில் உள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும் அன்னப்புத்தூர் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம். பல்லவர் காலத்திலும் அதனை தொடர்ந்து சோழர் காலத்திலும் அன்னம்புத்தூர் கிராமம் சிறந்து விளங்கியது என்பதை இங்கிருக்கும் வரலாற்று தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement