தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் படுகொலை; சேலத்தில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 2 பேர் சிக்கினர்: நாமக்கல்லை சேர்ந்தவர்கள்
இதுதொடர்பாக பள்ளியின் உறுதி தன்மையை பார்வையிட நேற்று முன்தினம் முருகானந்தம், ரகுராம் (35), அவரது வக்கீல் தினேஷ் (35) உள்பட 4 பேர் பள்ளிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படையினர், முருகானந்தம், ரகுராம், தினேஷ் ஆகியோரை வெட்டினர். இதில் முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையினரான திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (29), சேலம் போலூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (22), நாமக்கல் சுந்தரம் (26), திருச்சி நாகராஜன் (29), தாராபுரம் நாட்டுதுரை (65) ஆகியோர் போலீசில் சரணடைந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் அரசு மருத்துமவமனையில் வக்கீல் முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து தாய் சுபத்ராதேவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது, உடலை வாங்க மறுத்து உறவினர் திருப்பூர்- தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த கொலை தொடர்பாக இன்று அதிகாலையில் சேலம் கோரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த நாமக்கல்லை சேர்ந்த சசிகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை தாராபுரத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடிவருகின்றனர்.