தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் வேலைவாய்ப்பு: ஆக. 16 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் நிலை 1, ரூ.15,700-50000 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.4800-ரூ.10,000 தர ஊதியம் ரூ.1300) எனும் சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான அனைத்துப் படிகளுடன் கூடிய அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும்;

நிலை – 15, ரூ.36200 – 114800 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.9300-34800 தர ஊதியம் ரூ.4500) எனும் சம்பளத்திலமைந்த தொகுப்பாளர் பணியிடம் ஒன்றும் நிரப்பப்படவுள்ளன. அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA-Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு ‘ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர்’ (Scheduled Caste - Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (VIII Std. Passed) தொகுப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் எம்.ஏ.). அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தினை ஒட்டி தன்விவரக் குறிப்புடன் பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைத் தற்சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து 16.08.2025ஆம் நாள் மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, “இயக்குநர் (முகூபொ), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-29520509 என்னும் தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Related News