புத்துக்கோயில் பகுதியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த கேரள பெண்: ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி ரோகிணி. இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷ் தந்தை சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பத்துக்காக கணவர், மனைவி இருவரும் திருவனந்தபுரம் ரயிலில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில் வந்து கொண்டு இருந்தபோது ராஜேஷ் மற்றும் ரோகிணி இருவரும் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். பின்னர் ராஜேஷ் மட்டும் இருக்கைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் தனது மனைவி இருக்கைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கணவர் இதுகுறித்து காட்பாடி ரயில் நிலையத்துக்கு புகார் கொடுத்துள்ளார். புகார் பெயரில் காட்பாடி ரயில்வே போலீசாரும், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரும் ரோகிணியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்து புதுக்கோயில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரோகிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து இருப்பதாக தெரிய வந்தது. இதைதொடர்ந்து ரோகிணி உடலை மீட்டு ஜோலார்பேட்டை காவல் துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.