தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீதிமன்றங்களில் போலீஸ் ஆஜராவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: நீதிமன்றங்களில் போலீஸ் ஆஜராவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், குற்ற வழக்கு தொடர்வு இயக்குநர் கிருஷ்ணராஜா, அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முக்கியமான வழக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும் வழக்குகளில் மட்டுமே காவல்துறையினரை வரவழைக்க வேண்டும். காவல் துறையினர் நேரடியாக வர தேவையில்லாத வழக்குகளில் அவர்களை நீதிமன்றங்களுக்கு வர வைப்பதை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

காணொலி காட்சி வாயிலாக காவல் துறையினரை தொடர்பு கொள்வதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான வசதியை காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகளின் தன்மையைப் பொறுத்து தேவைப்படும் வழக்கு விவர குறிப்புகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மின்னணு முறையில் அனுப்ப வேண்டும். காவல்துறையினர் பூர்த்தி செய்த விவரங்களை தேவையான ஆவணங்களை இணைத்து மின்னஞ்சல் அல்லது பிற இணையவழி மூலம் சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விவரங்கள் முழுமையாக இருப்பதை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் காவல் துறையினர் அவர்களது காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு பயணம் மேற்கொள்வது மற்றும் இதனால் ஏற்படும் நேர விரயம் தவிர்க்கப்படும். மாவட்ட வாரியாக காவல்துறை பொறுப்பாளர்களை உயர்நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகங்களில் நியமித்து அந்தந்த மாவட்ட காவல் நிலையங்களில் இருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் பிற ஆவணங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, தேவையான ஆவணங்கள் வரப்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்களிடம் வழங்கவேண்டும்.

இவர்களது பணியை காவல்துறை தலைமை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் “நீதிமன்றப்பிரிவு” மேற்பார்வையிட வேண்டும். காவல்துறை தலைமை இயக்குநர் மேற்படி வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து மாவட்டங்களில் செம்மையாக செயல்படுத்த காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அனைத்து காவல் துறையினருக்கும் உரிய அறிவுரைகளை காவல்துறை இயக்குனர் அனுப்பிவைக்க வேண்டும்.

தகவல் வழங்க தவறினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மரியாதையான அணுகுமுறை, காவல்துறையினர் உரிய தகவல்களை தர தவறும் பட்சத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் காவல் அதிகாரிகளை கடிந்துகொள்ளாமல் அவர்களின் மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற வேண்டும். அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் காவல்துறையினரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

Related News