தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

சென்னை: நெல்லை மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்றப்பேரவை விதி 110-இன்கீழ், முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். “வீரம் விளைந்த நெல்லை நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்“ என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரால், 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலமாக கிடைத்தப் அரியப் பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் 106 முதுமக்கள் தாழிகள் அகழாய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.33 கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் பரப்பளவில், 54,000 சதுர அடி கொண்ட 7 பகுதியாக கட்டப்பட்டுள்ளது. பொருநையில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில், சிவகளைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த ஓர் கட்டடமும், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டடமும், கொற்கைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டடமும் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட கட்டடங்களும் கட்டப்பட்டது.

பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மீதமுள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா முதன்மைத் தலைமைப் பொறியாளர் ச.மணிவண்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related News