மத்தியப்பிரதேசத்தில் ஒரே ஆண்டில் 23,129 பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்!!
அதில் 2025 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தம் 23,129 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 292 பேரும், சிறுமிகளை வன்கொடுமை செய்த 282 பேரும் என மொத்தம் 575 பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 443 பேரும், சிறுமிகள் மீதான வழக்குகளில் 167 பேரும் என மொத்தம் 610 குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய 1,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.