மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி மனுவை திருப்பி அனுப்ப மனு: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்
குறிப்பாக 14 கேள்விகள் எழுப்பபட்டிருந்தது. இந்த நிலையில் தான் கேரள மாநிலம் சார்பாக அந்த மாநிலத்தின் ஆளுநருக்கு எதிராக சில வழக்குகளும் நிலவையிலும் இருக்கின்றது. அது தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது கேரள அரசு சார்பாக ஒரு புதிய பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
அந்த பதில் மனுவில் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணையம், அதாவது தமிழ்நாடு அரசு சார்பாக தொடரப்பட்ட வழக்கில் கால நிர்ணையம் செய்யப்பட்டுருந்த நிலையில் அந்த தீர்ப்பானது சரியானதே என கேரள அரசு சார்பாக பதில் மனு ஆனது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே குடியரசு தலைவர் மூலம் இந்த மத்திய அரசுக்கு தாக்கல் செய்திருக்கின்ற மனுவை வந்து திரும்பி அனுப்ப வேண்டும்.
அதேபோல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழக்கும் விவகாரத்தில் காலநிர்ணையம் செய்வது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு குடியரசு தலைவர் மூலம் அனுப்பியுள்ள கேள்விகள் அரசியல் சாசனப்படி பரிசீலனைக்கு உகந்தது அல்ல எனவும் எனவே குடியரசு தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மனுவை திருப்பி அனுப்ப வேண்டும் என கேரள அரசு சார்பாக இந்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டிருக்கிறது.