தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேரளாவில் பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன், ஜூலைக்கு மாற்ற திட்டம்.. பொதுமக்களிடம் கருத்து கேட்ட அம்மாநில அரசு!!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பள்ளிகளுக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல் - மே மாதத்திற்கு பதிலாக மழைக்காலமான ஜூன் - ஜூலைக்கு மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். மழைக் காலங்களில் அந்தந்த மாவட்டங்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அதிக மழைப் பொழிவு எப்போதும் இருக்கும். இதனால், கேரளத்தில் மழைக் காலங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிகமாக மழை பெய்யும் கேரள மாநிலத்தில் மழை காலங்களில் நிலச்சரிவு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எற்படுவது என பல இடர்கள் ஏற்படுகின்றன. இதையடுத்து உள்ளூர் விடுமுறைகள் அதிகமாக விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடைகாலத்திற்கு பதில் மழை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாமா என கேரள பள்ளி கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கேரள மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் மாநிலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படும் என்பது உண்மைதான். அதேசமயம் மான்சூன் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த மழை காரணமாக பல பெரும்பாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை ஏற்படுகிறது. அதனால் படிப்பு தடைபடுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறை காலம் ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக மழைக்காலமான ஜூன், ஜூலை மாதங்களில் மாற்றி வைக்கலாமா என ஒரு பொது விவாதத்தை நான் தொடங்கிவைக்கிறேன். கோடை காலமும் மழைக்காலமும் சேர்த்து மே, ஜூன் மாதங்களில் விடுமுறை விடலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் உங்களின் மதிப்புமிக்க கருத்துகளையும், வழிகாட்டுதலையும் அறிய விரும்புகிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்னென்ன நன்மைகள் உள்ளன, என்னென்ன தீமைகள் உள்ளன. குழந்தைகளின் படிப்பையும் ஆரோக்கியத்தையும் இது பாதிக்குமா? ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இது நடைமுறையில் சாத்தியப்படுமா. மற்ற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள விடுமுறை காலங்களிலிருந்து வித்தியாசமாக நாம் எப்படி முன்மாதிரியாக மாறலாம் என்பது போன்ற உங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் கருத்துக்களை பதிவிடுங்கள். ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு தொடக்கமிட இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.