கேரளா மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்!!
முன்னதாக இந்த கோவிந்தசாமி என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு ரயிலில் சென்ற ஒரு இளம்பெணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் என்ற குற்றசாட்டில் தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் அதிகாலை ஒரு 1 மணியளவில் சிறையில் இருந்து தப்பிச்சென்று இருக்கிறார். இதையடுத்து காலை சிறையில் ரவுண்ட்ஸ் பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் பார்த்த பொழுது கோவிந்தசாமி அடைக்கப்பட்டு இருந்த அறை காலியாக இருந்தது.
இதனை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த போலீசார் உடனடியான கோவிந்தசாமி தப்பி ஓடக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியை தீவிரமான தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். இந்த நிலையில் தான் தப்பி ஓடிய கோவிந்தசாமி அதே பகுதில் இருந்த ஒரு வீட்டில் வைத்து பொதுமக்களால் பிடிபட்டுள்ளார் என்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.