தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இஸ்ரேல், பாலஸ்தீன மோதலுக்கு உடனடியாக தீர்வு காண உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க் : இஸ்ரேல், பாலஸ்தீன மோதலுக்கு உடனடியாக தீர்வு காண உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐநாவின் 3 நாள் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதனை அமெரிக்காவும் இஸ்ரேலும் புறக்கணித்தன. தொடர்ந்து பாலஸ்தீன பிரச்சனைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு தனித்தனி நாடுகளே தீர்வு என்ற தலைப்பில் "நியூயார்க் பிரகடனம்" என்ற 25 பக்க ஆவணம் வெளியிடப்பட்டது. அதில் காஸாவை போரை நிறுத்த வேண்டும், காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அனைத்து துணை கைதிகளையும் விடுவித்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் தீர்வை வரவேற்பதாகவும் அதற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி தூதரகங்கள் வாயிலாக இருநாட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.