தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவின் சிறப்பான பேட்டிங்கால் மான்செஸ்டர் டெஸ்ட் டிரா; கடைசி டெஸ்ட்டில் வென்று தொடரை சமன் செய்வோம்: கேப்டன் சுப்மன் கில் நம்பிக்கை

மான்செஸ்டர்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4வது டெஸ்ட் மான் செஸ்டரில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்னுக்குஆல்அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து 669 ரன் குவித்தது. இதனால் 311ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட் இழந்த நிலையில் கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில் பொறுமையாக ஆடினர். கடைசி நாளான நேற்று ராகுல் 90 ரன்னில் வெளியேற சதம் அடித்த கில் 103 ரன்னில் அவுட் ஆனார்.
Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த வாஷிங்டன்சுந்தர், ஜடேஜா அருமையாக ஆடினர். ஜடேஜா 5வது சதத்தையும், சுந்தர் முதல் சதமும் அடித்தனர். 143 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. ஜடேஜா 107, சுந்தர் 101 ரன்னில் களத்தில்இருந்தனர். 6 விக்கெட் மற்றும் 141ரன் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன்விருது பெற்றார். 2வது இன்னிங்ஸில் இந்தியாவின் சிறப்பான பேட்டிங் போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது.

போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் கில் கூறியதாவது: ‘எங்கள் பேட்டிங்கை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். பிட்ச்சில் ஒவ்வொரு பந்திலுமே ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் ஒவ்வொரு பந்தாக மனதில் வைத்தே கடக்க விரும்பினோம். ஆட்டத்தை எவ்வளவு இழுத்து எவ்வளவு நேரம் நின்று ஆட முடியுமோ அவ்வளவு ஆட வேண்டும் என நினைத்தோம். ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அற்புதமாக ஆடினர். அவர்களின் ஆட்டம் சதத்துக்கு தகுதியானது என நினைத்தோம்.

அதனால்தான் அவ்வளவு சீக்கிரமாக டிராவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இங்கே ஒவ்வொரு போட்டியுமே கடைசி நாளின் கடைசி செஷன் வரை செல்கிறது. இதிலிருந்து ஒரு அணியாக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. கடைசிப் போட்டியை வென்று சீரிஸை டிரா செய்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சிறந்த ஆட்டத்தை அனுபவித்து ஆட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம். அடுத்த போட்டியில் பும்ரா ஆடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’ என்றார். 4 போட்டி முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி டெஸ்ட் வரும் 31ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடக்கிறது.

இந்தியாவை பாராட்டியே ஆக வேண்டும்;

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நம்மிடம் இருக்கும் ஆற்றல் எல்லாமும் தீர்ந்துவிட்டாலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய பாணி.ஆனாலும் நாங்கள் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தோம். இந்தியா கடுமையாக முயன்று ஆட்டத்துக்குள் வந்துவிட்டது. ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அற்புதமாக ஆடினர். டிரா மட்டும்தான் ஒரே வாய்ப்புள்ள ரிசல்ட் எனும் நிலைக்கு போட்டியை கொண்டு வந்துவிட்டனர். அப்படியொரு சூழலில் பவுலர்களை மேலும் பவுலிங் செய்ய வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எங்கள் பவுலிங் யூனிட் நிறையவே உழைத்துவிட்டது. அடுத்த போட்டிக்கு முன்பாக நாங்கள் ஒவ்வொரு வீரரையும் பரிசோதித்து அவர்களின் நிலையை அறிந்து முடிவெடுக்க வேண்டும். 2 அணிகளுமே சிறந்த அணிகள். அழுத்தத்தோடு இங்கே வந்து இந்தியா ஆடும் விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்.’ என்றார்.

பிட்ஸ். பிட்ஸ்..

* காயம் காரணமாக கடைசி டெஸ்ட்டில் இருந்து ரிஷப் பன்ட் விலகி உள்ளதாகவும்,அவருக்கு பதில் தமிழக வீரர் ஜெகதீசன் நாராயணன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

* 2022ல் மெக்கல்லம் பயிற்சியாளரான பின்டெஸ்ட்டில் இங்கிலாந்தின் 2வது டிரா இதுவாகும். 40 டெஸ்ட்டில் 25ல் வெற்றி, 13ல் தோல்வி அடைந்துள்ளது. இதே மைதானத்தில் தான் ஆஸி.யுடன் 2023ல் மற்றொரு டெஸ்ட்டும் டிராவில் முடிந்தது.

* இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 7 முறை 350 பிளஸ் ரன்எடுத்துள்ளது. இதற்கு முன் ஆஸி. தான் 6முறை 350 பிளஸ் ரன் அடித்திருந்தது.

* மான் செஸ்டரில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணி வென்ற வரலாறு இல்லை. 12 போட்டியில் முதலில் பவுலிங் செய்த அணி 3ல் தோற்றுள்ளது. 9 டிராவில் முடிந்துள்ளது.

* மான்செஸ்டரில் 10 டெஸ்ட்டில் ஆடி உள்ள இந்தியா இதுவரை ஒன்றில் கூட வென்றது கிடையாது. அதிக டெஸ்ட்டில் ஆடி வெற்றிபெற முடியாத மைதானம் இதுதான்.

* இந்ததொடரில் கில் இதுவரை 4சதம் அடித்துள்ளார். இதற்கு முன் 1971,78-79ல் வெ.இண்டீசுக்கு எதிராக கவாஸ்கர் இதேபோல் 4, 2014-15ல ஆஸி.க்கு எதிராக கோஹ்லி 4 சதம் அடித்துள்ளனர்.

* 1947-48ல் இந்தியாவுக்கு எதிராக டான் பிராட்மேனும், 1978-79ல் வெ.இண்டீசுக்கு எதிராக கவாஸ்கருக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரில் 4 சதம்அடித்த 3வது கேப்டன் கில்தான்.

* 1930ல் பிராட் மேனுக்குபின் இங்கிலாந்தில் ஒரே தொடரில் 4 சதம் அடித்த 2வது கேப்டன் கில் தான்.

* இந்தத் தொடரில் கில் இதுவரை 722 ரன்கள்டுத்துள்ளார். இதற்குமுன் ஒரே தொடரில் அதிக ரன் எடுத்து இந்தியராக கவாஸ்கர் உள்ளார். (1970ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 774ரன்)

Advertisement