சேலத்தில் ரிசர்வ் வங்கி பெயரைக் கூறி ரூ.40 கோடி முதலீடு வசூல்: மோசடி தொடர்பாக திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை
திருவள்ளூர்: சேலத்தில் ரிசர்வ் வங்கி பெயரைக் கூறி பொதுமக்களிடம் ரூ.40 கோடி பணம் வசூலித்த விவரங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சேலத்தில் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி அதில் காப்பர் மற்றும் இரிடியத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடி சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பணத்தை பெற்று ரூ.45 கோடி முதலீடு பணத்தை மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் சிபிசிஐடிபோலீசார் வழக்கில் தொடர்பில் உள்ள வீடுகளிலும், அலுவலகத்திலும் விசாரணையும் சோதனையானது மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் உள்ள சுகுமார் என்பவர் வீட்டில் இன்று காலை திருவள்ளுர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திலகவதி தலைமையில் போலீசார் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் பலலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு மற்றும் போலியான ரிசர்வ் வங்கி ஆவணங்கள், முத்திரை தால்களை அவர்கள் பறிமுதல் செய்து, தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கில் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் வடமாநில பகுதியிலும் காவல்துறை, சிபிசிஐடி போலீசார் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நிறைவடைந்த பிறகு முழுமையாக விவரம் தெரியவரும் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம், சந்திர தர்மபுரி சேர்ந்த அனுப்புமணி சேலத்தில் சேர்ந்த முத்துசாமி, கேசவன், கிஷோர் குமார் மற்றும் மேட்டூர் பகுதியில் உள்ளிட்ட உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த விஜய கணேசன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.