ஐதாராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் விஜய் தேவரகொண்டா
ஐதராபாத்: சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதே வழக்கில் நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 36 சினிமா பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இவர்கள் அனைவரும் மஹாதேவ் பெட்டிங் ஆப் என்ற செயலிக்கான விளம்பத்தில் நடித்திருந்தனர். அந்த செயலியை பயன்படுத்திய பலரும் நிதி நெறுக்கடியில் சிக்கியிருந்தனர். பயனாளர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் பதியப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை அமலாக்கத்துறை இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பல்வேறு முன்னனி நடிகர்கள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா விசாரனைக்கு ஆஜராகியுள்ளார்.