நெல்லை சுப்பிரமணியபுரத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தீயை கட்டுக்குள் கொண்டுவர 3 மணி நேரமாக வீரர்கள் முயற்சி
நெல்லை: நெல்லை சுப்பிரமணியபுரத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதி சேர்ந்தவர் சங்கர பாண்டியன். இவருக்கு சுப்பிரமணியபுரத்தில் ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் சொந்தமாக உள்ளது. இங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் பழைய பொருட்கள் சேகரித்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடோனுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் பழைய பொருட்கள் மீது தீப்பிடிக்க தொடங்கியது. இந்த தீயானது மளமளவென அருகில் இருக்க கூடிய பிளாஸ்டிக்கில் பரவ தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக கட்சி அளித்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு மேல் தீ எரிந்து கொண்டு இருந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் பழையகோட்டை, பேட்டை, முல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 15க்கு மேற்பட்ட வண்டிகளில் தண்ணீரை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.