எண்மிய இடைநிலை மற்றும் ஒலிப்பதிவு பாடப்பிரிவுகளில் சேர காலஅவகாசம் நீட்டிப்பு
இந்தியா, வெளிநாடுகள் என பல்வேறு நிறுவனங்களில் திறமை வாய்ந்த பணிவாய்ப்புகள் கிடைக்கக்கூடியவை. மேலும், ஒலிப்பதிவுப் பிரிவு (Audiography) திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளில் ஒலிப்பதிவு, எடிட்டிங், கலவை மற்றும் வடிவமைப்பை உட்படுத்திய தொழில்நுட்பம் ஆகும். .படங்களில் இயற்கை ஒலிகள், குரல் பதிவு (Dubbing), பாடல்கள், பின்னணி சத்தங்கள் ஆகியவை இந்த பிரிவின் மூலம் உருவாக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது. இந்த பாடப்பிரிவு திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியப் பயிற்சியாகக் கருதப்படுகிறது. இந்நிறுவனத்தில் எண்மிய இடைநிலை (Digital Intermediate) மற்றும் ஒலிப்பதிவு (Audiography) பாடப்பிரிவுகள், நான்காண்டு பட்டப்படிப்புகளாக, அரசு நிர்ணயித்த கட்டணத்தில் கற்பிக்கப்படுகின்றன.
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்பம் குறித்த விவரங்கள் இந்நிறுவன இணையதளமான www.filminstitute.tn.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்குக்கான காலஅவகாசம் 07.08.2025 (வியாழக்கிழமை) மாலை 05.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, எண்மிய இடைநிலை (Digital Intermediate) மற்றும் ஒலிப்பதிவு (Audiography) பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில விருப்பம் உள்ள மாணவர்கள், இந்நிறுவன இணையதளம் www.filminstitute.tn.gov.in வழியாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.