அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே உள்ளது; பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
திருச்சி: அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம் அளித்தார்.
விவசாய கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது:
விவசாய கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். பயிர்க்கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளேன்.
அதிமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்படுத்த முடியாது
அதிமுக கூட்டணியில் பிரச்சனையை ஏற்படுத்த முடியாது.எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகள் குறித்து அந்தந்த கட்சி தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
“10.5% உள் இடஒதுக்கீடு முடிந்து போன விஷயம்”
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடுமுடிந்து போன விஷயம். இது தொடர்பாக நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது, தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணியில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என்பதை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம் என தெரிவித்தார்.