தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை : ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், " அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 1,398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அமலாக்கத்துறை வழக்குகளில் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாததால் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் ED தொடர்ந்த வழக்குகளில் 0.13% வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்."எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலே, "மோடி அரசு எதிர்க்கட்சிகளை குறிவைக்க ED-ஐ ஒரு தனிப்பட்ட மாஃபியாவாகப் பயன்படுத்தியுள்ளது. ED வழக்குகளில், அப்பாவி மக்கள் கூட ஜாமீன் பெற பல மாதங்கள் ஆகும்.கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவழித்து ஆயிரக்கணக்கான மக்களைச் சிறையில் அடைத்த பிறகு, ED 10 ஆண்டுகளில் 0.13% மட்டுமே வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. ED என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் கிரிமினல் சிண்டிகேட் தான் தவிர வேறில்லை, அதன் ஒரே பணி பாஜகவுக்காக மிரட்டி பணம் பறித்தல் ஆகும்."இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News