ED பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்: ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வழக்கில் டெல்லி நீதிமன்றம் கருத்து!!
டெல்லி: அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதில் அவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2017ம் ஆண்டு ரூ1.62கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தற்போது வரையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என சத்யேந்திர ஜெயின் தொடர்ந்த டெல்லி உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சத்யேந்திர ஜெயின் வீட்டில் பல்வேறு ஆவணங்கள் ரூ.2.85 கோடி, 1.8 கிலோ தங்க காசுகள் கைப்பற்றப்பட்டதாக கைப்பற்றிய பொருட்கள் பற்றி அமலாக்கத்துறை தவறான அறிக்கை சமர்ப்பித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது போது, அண்மையில் அமலாக்கத்துறை சத்யேந்திர ஜெயின் வீட்டில் இருந்து பணமோ, தங்கமோ கைப்பற்றவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என தெரிவித்த நிலையில், வேறு வீட்டில் கைப்பற்றிய பணம், தங்கத்தை சத்யேந்திர ஜெயின் வீட்டில் கைப்பற்றியது போன்று தவறான அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.