தூய்மை இயக்கம் பணிகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக நம்முடைய சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறை மூலம் ‘தூய்மை இயக்கம்’ எனும் ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தது.
திடக்கழிவுகளை குப்பை மேடுகளில் கொட்டாமல், அவற்றை தொழில்நுட்ப உதவியோடு மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்தோம். மேலும், இதற்கு தேவைப்படும் பயிற்சியினை வழங்கிடவும், உட்கட்டமைப்புகள் சார்ந்து சிறப்புக்கவனம் செலுத்திடவும் அறிவுரைகளை வழங்கினார். தூய்மை இயக்கம்’ இலக்கை நோக்கி வெல்லட்டும், தூய்மையான தமிழ்நாட்டை உருவாக்க உறுதியேற்போம் என்று துணை முதல்வர் கூறியுள்ளார்.