கடலூர் அருகே அறுந்து கிடந்த உயிர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
இதில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்தில் விவசாயி கஜேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மனைவி மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாதாந்திர பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் உறிய முறையில் மின்வரிய ஊழியர்கள் அதிகாரிகள் அலட்சியமாக பணிபுரித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் பணிகளை சரியாக செய்யாததால் தற்பொழுது இந்த விவசாயி உயிரிழந்ததாக கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்த விவசாயிக்கு உரிய நிர்வாணம் அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விவசாயி கஜேந்திரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிதம்பரம் காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.