கடலூர் குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்: யார் போட்டது என வட்டாட்சியர் விசாரணை
கடலூர்: கடலூர் மாநகராட்சியில் குப்பை வண்டியில் நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குவியல் குவியலாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்தை தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகள் வாகனங்கள் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் தான் வழக்கம் போல இன்று காலை குப்பை வாகனத்தை எடுக்க கடலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வந்தனர்.
அப்போது வாகனத்தில் வாக்காளர் அடையாள அட்டை அதிக அளவில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாநகராட்சி அதிகரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகளும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் வட்டாட்சியர் மகேஷ், சோதனை செய்த போது வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வாக்காளர் அடையாள அட்டைகள் இங்க எப்படி வந்தது. இதை கொண்டு வந்து குப்பை வாகனங்களில் போட்டவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாக்காளர் அடையாள அட்டைகள், வாக்கு பதிவின் போது பயன்படுத்தப்படும் மை, சீல் மற்றும் தேர்தலுக்கு பயன்படும் பொருட்களை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பொருட்கள் எல்லாம் எப்படி வந்தது குறித்து வட்டாட்சி விசாரித்து வருகின்றார். மாநகர்ச்சிக்கு உட்பட்ட வாகனத்தில் குவியல் குவியலாக வாக்காளர் அடையாள அட்டை கிடந்தது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.