தொடர் மழை; குற்றால அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
Advertisement
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement