கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன்? போக்குவரத்து துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
Advertisement
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிர்வாக பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போது அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் போது, நேரடியாக பொது போக்குவரத்து வசதிகளை வழங்கும் பணியில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இச்சலுகைகள் வழங்காதது ஏன்?. இதுசம்பந்தமாக ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத்துறை செயலாளருக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
Advertisement