கோவையில் விமானவியல் துறை சார்ந்த ஏரோபிளஸ் 2025 கண்காட்சி: விமானங்கள் விவரங்களை அறிந்த ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்
விமானங்களின் சிறப்புகள், அதை இயங்கும் முறை குறித்து விமானவியல் மாணவர்கள் கண்காட்சி காண வந்த பள்ளி மாணவர்களிடம் விவரித்தனர். இக்கண்காட்சியில் இயங்கும் நிலையில் உள்ள விமானங்கள், பறக்கும் நிலையிலான விமானங்கள், ட்ரோன்கள், ரோபோடிக் நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றனர். விமானிகள், விமான பணி பெண்கள், ஊழியர்கள் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் 10க்கு மேற்பட்ட துப்பாக்கிகளின் கண்காட்சி சிமுலேட்டர் இயந்திர மூலம் விமான இயக்கம், விமான பாகங்கள், மாதிரி விமான நிலையத்திற்கான கட்டமைப்புகள் இடம்பெற்று கண்களுக்கு விருந்தளித்தன.
விமானங்கள் வானத்திலும், புத்தக வரைபடங்களிலும் பார்த்து வந்த நிலையில், கண்காட்சியில் நேரடியாக பார்த்தது புது அனுபவத்தை தந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். கண்காட்சியில் முதல் இரண்டு நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. இறுதி நாளான ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம்.