தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் 18 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளையும், அருங்காட்சியக துறை சார்பில், சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
Advertisement

ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுலாத் துறை சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் அந்த வகையில், தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில், தென்காசி மாவட்டம், குண்டாறு அணையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தளங்கள், வரவேற்பு மையம், உணவகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் 2 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுப் பகுதி, உணவகக் கட்டடம் உள்ளிட்ட சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தில் 3 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக மாற்ற ஏதுவாக கட்டப்பட்ட உணவகக் கட்டடம்; புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்குடா கடற்கரையில் 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக மாற்றிக் கட்டப்பட்ட பார்வையாளர்கள் கூடம், நிருவாகக் கட்டடம், வாகன நிறுத்துமிடம், நடைபாதை, படகுத்துறை உள்ளிட்ட பல்வேறு பணிகள், மதுரை மாவட்டம், ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விருந்து மண்டபக் கட்டடம், நவீன சமையலறைக் கட்டடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய உணவகக் கட்டடம்; என மொத்தம் 18 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற சுற்றுலா மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தை திறந்து வைத்தல் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களுடன் ஒத்திசையும் வகையில் முகப்புத் தோற்றம் நன்கு அழகுற வடிவமைக்கப்பட்டு, இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து காப்பாட்சியர்கள் மற்றும் அனைத்துக் அலுவலகப் பணியாளர்களுக்கான அறைகள், கூட்டஅரங்கு, பிறவசதிகளுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூபாய் 6 கோடியே 84 இலட்சம் மதிப்பீட்டில் 10,532 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் திருமதி ச. கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News