பூமிக்கு அடியில் ஹோட்டல்.. சீனாவில் பதுங்கு குழியாக செயல்பட்ட இடம் உணவகமாக புதிய அவதாரம்!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் பகுதியாக மாறியுள்ளது இந்த உணவகம். வெளியில் வெயில் சுட்டெரித்தாலும் பதுங்கு குழியில் செயல்படும் உணவகத்தில் குளிர்ந்த சுழல் நிலவுவது தங்களுக்கு பெரும் நிம்மதியை தருவதாக கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். சோங்கிங் நகரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தும் நிலையில், உணவகத்துக்குள் 77 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலையே நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி குடுப்பதினரின் பிறந்தநாள் விழாவை இந்த உணவகத்திலேயே கொண்டாடி மகிழ்கின்றனர் சோங்கிங் நகர வாசிகள். 520 மீட்டர் நீளம் கொண்ட இந்த உணவகத்தில் வடிக்கையாளர்களுக்காக 280 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோங்கிங் நகரில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.