தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னையில் ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது

சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாதி திரு.சல்மான் சலீம், ஆ/வ29, த/பெ.அப்தாஸ் சலீம் என்பவர் நடத்திவரும் Travel Management அலுவலகத்தில் Vendor நிறுவனத்தில் இருந்து வந்திருந்த EMail ல் கொடுக்கப்பட்டிருந்த Punjab National Bank வங்கி கணக்கில் 17.07.2025 அன்று பணம் ரூ.17,72,868/- பணம் செலுத்திவிட்டதாகவும், பின்னர் Vendor நிறுவனத்தில் பணம் அனுப்பி உள்ளது குறித்து கேட்ட போது. அவர்கள் அந்த மின்னஞ்சல் முகவரி அவர்களுடையது இல்லை என்றும் மேற்படி வங்கி கணக்கும் அவர்களுடையது இல்லை என தெரிவித்துள்ளனர்.

சல்மான் சலீம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது சம்மந்தமாக ஆன்லைனில் புகார் பதிவு செய்தும், பின்னர் மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் கடந்த 28.07.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர். மேற்கண்ட புகாரில் உடனடி நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், மேற்கு மண்டல இணை ஆணையாளர் திஷா மிட்டல், அறிவுரையின் பேரில், சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் புலன் விசாரணையில் புகார்தாரர் 17.07.2025 ந்தேதி பணம் அனுப்பிய வங்கி கணக்கானது சிவகாசியில் உள்ள Punjab National bank வங்கி கணக்கு என்பதும், மேற்படி பணத்தினை வங்கி கணக்கிலிருந்து உரிமையாளர் காசோலைகள் மூலமாக எடுத்துவிட்டதாக தெரியவந்ததால் மேற்படி வங்கி கணக்கின் உரிமையாளர் எதிரி 1. புஷ்பா, பெ/35, க/பெ.சதுரகிரி மற்றும் அவரது கணவர் 2.சதுரகிரி, ஆ/வ 41, த/பெ கிருஷ்ணன் ஆகியோரை காவல் குழுவினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள எதிரிகளின் வீட்டின் அருகில் வைத்து கைது செய்தனர். எதிரிகளிடம் இருந்து பணம் ரூ.2,30,000/-, 02 செல்போன்கள், வங்கி பாஸ்புக் மற்றும் செக்புக் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் எதிரி புஷ்பாவை facebook மூலமாக தொடர்பு கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் Chris Otto என்ற நபர் பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்புவதாகவும், அதற்கான பார்சல் கட்டணத்தை Delta Courier Service company mail Idல் தெரிவிப்பார்கள் என கூறியதை நம்பி எதிரிகள் இருவரும் 03 வங்கி கணக்குகளை சைபர் கிரிமினல்கள் கேட்டவாறு தொடங்கி, அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த புது டெல்லி முகவரிக்கு போஸ்ட் செய்தும் பின்னர் புகார்தாரர் வங்கி கணக்கில் இருந்த வந்த பணம் ரூ.17,72,868/-ஐ Self Withdrawal Cheque வழியாக எடுத்து அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளில் deposit செய்ததாகவும் மீதமிருந்த பணம் ரூ.3,67,500./- அவர்களுடைய செலவிற்கு வைத்து கொண்டது தெரியவந்தது.

விசாரணைக்குப்பின்னர் எதிரிகள் இருவரும் இன்று (01.08.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related News