சென்னை பறக்கும் ரயில் நிறுவனம் (MRTS) சென்னை மெட்ரோவுடன் இணைப்பு எப்போது? - கனிமொழி எம்.பி. கேள்வி
சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
MRTS இன் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை CMRL க்கு முழுமையாக மாற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?
இந்த மாற்றத்தை சுமுகமாக செயல்படுத்துவதற்காக நிதி, செயல்பாடு மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களை அரசு பரிசீலித்து வருகிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
MRTS நெட்வொர்க்கை CMRL க்கு முழுமையாக மாற்றுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன? இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?” என்ற கேள்விகளை கனிமொழி எம்.பி. எழுப்பினார்.