சென்னை பறக்கும் ரயில் மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம்
சென்னை: சென்னை பறக்கும் ரயில் மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தமிழக அரசு தகவல். சென்னை பெருநகர் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயிலுடன் இணைக்க முடிவு செய்துள்ளது
சென்னை பறக்கும் ரயில் சென்னை மெட்ரோ ரயில் இணைப்பிற்கு கொள்கையளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதல் ஆனது மிக முக்கிதுவமாக பார்க்கப்படுகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்துவருகிறது.
இதற்காக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதிக்கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார் இதனை தொடர்ந்து. இந்த பணிகளை வேதப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கபட்டுருக்கிறது. இந்நிலையில் சென்னையில் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் இணைப்பு பகுதிகளை கொள்கை அளவிலான ஒப்புதல் ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது.
அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மெட்ரோ ரயில்வேக்கும் புரிந்துணர்வு ஓப்பந்தம் மேற்கொள்ள பணிகளானது அனைத்து பகுதிகளுக்கும் மேற்கொள்ளப்படும் இதற்காக அணைத்து பணிகளையும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கு அடுத்த 3 மாதங்களில் புரிந்தனர் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் நிறைவுபெற்று புரிந்தனர் புரிந்துணர்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பிறகு இந்த ஆண்டு இறுதிகுள் பறக்கும் ரயில் சேவையானது சென்னை மெட்ரோ ரயில் சேவையானது இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆண்டு இறுதிகுள் சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு அது மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டு அந்த வழிதடங்கள் அனைத்தும் தமிழக அரசின் ஒப்படைக்க படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முழுவதுமாக பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தி அதை மெட்ரோ ரயில் தடத்திற்கு இணையாக தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.