2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும்: வைகோ
சென்னை: 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் வைகோ சந்தித்தார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
2026ல் கூட்டணி அரசு அமையாது: வைகோ
2026ல் கூட்டணி அரசு அமையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார். 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். திமுகவில் இருந்து மதிமுக வெளியேறுவதாக சில ஊடகங்கள் அபாண்டமான செய்திகள் வெளியிட்டதாக வைகோ கண்டனம் தெரிவித்தார். பாஜகவுடன் இம்மிளவும் மதிமுக உறவு வைத்துக் கொள்ளாது.
ஆணவக் கொலையை தடுக்க சட்டங்கள் இயற்ற வேண்டும்:
ஆணவக் கொலையை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். கவின் கொலை வழக்கில் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டார்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயணத்தில் மக்கள் திரளானோர் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்துத்துவ சக்திகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
இந்துத்துவ சக்திகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் எக்காரணம் கொண்டும் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்.