வெடிகுண்டு மிரட்டல்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காவல்துறை சோதனை
மதுரை: வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டி.ஜி.பி அலுவலகத்திற்கு ஒரு மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்மந்தமாக ஒரு தகவல் வந்தனர். அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், அருகில் இருக்கக்கூடிய தர்கா ஆகியவற்றிற்கு வெடிகுண்டு வச்சிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மதுரை மாநகர போலீசார் உதவியோட காவல் துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மீனாட்சி அம்மன் கோவிலுள்ள சன்னதி பகுதிகள் மற்றும் அன்னதானம் வழங்க கூடிய இடம், தெப்பக்குளம், கோவிலுனுடைய நான்கு கோபுரம் பகுதிகளில் பக்தர்களுடைய காலனி வைக்கக்கூடிய இடங்கள் என பல்வேறு இடங்களிலும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் மேற்கொண்டனர்.
இதே மாதிரிதான் திருப்பரங்குன்றம் கோவிலின் பெரிய வீதியில் இருக்கக்கூடிய சிக்கந்தர் பாதுஷா தர்காவிலும் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மலை மேல இருக்கக்கூடிய காசிநாதர் கோவிலிலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த மிரட்டல் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.