முழு கொள்ளளவை எட்டும் நிலையில் ஆழியாறு அணை: ஆழியாறு கரையோரப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
கோவை: பொள்ளாச்சி ஆழியாறு அணை முழு கொள்ளளவு எட்டும் நிலையில் இருப்பதால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி ஆழியாறு அணை மொத்தம் 120 அடி உயரம் கொண்டது. கடந்த மாதம் முதலே தென்மேற்கு பருவ மழையானது தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், காவேரிக்குள் மீன்பூடிக்கும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆழியாறு அணை நீர் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், 120 கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை 119ஆக எட்டியுள்ளது. வினாடிக்கு 1,077 கன அடி தண்ணீர் ஆழியாறு அணைக்கு வந்து கொண்டு இருப்பதால் 120 கொள்ளை கொண்ட அணை திறக்கும் தருவாயில் உள்ளது. அணையை பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் மூன்று மதகுகள் வழியாக சுமார் 1,329 கனஅடி தண்ணீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆழியாறு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள ஆபாய எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.