ஆலந்தூர் ஆசர்கானா வளைவில் மெட்ரோ ரயில் தூணில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி; நண்பர் சீரியஸ்
இவர்கள் இருவரும் இன்று அதிகாலை அஸ்தினாபுரத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா நோக்கி பைக்கில் சென்றனர். ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பைக் அங்குள்ள மெட்ரோ ரயில் தூண் மீது படுவேகமாக மோதியதில் பைக்குடன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பார்த்ததும் சாலையில் சென்றவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பரங்கிமலை போலீசார் வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய யோனேசை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக பரங்கிமலை உதவி கமிஷனர் சிவகுமார், ஆய்வாளர் அகிலா ஆகியோர் வழக்குபதிவு செய்தனர். கிஷோர் சடலத்தை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 2 பேரும் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.