மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள தர்மஸ்தலா 13 இடங்களை குறிவைத்து தோண்டும் பணி தொடக்கம்
அப்படி புதைக்கப்பட்ட பெண்களின் உடல்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் சில நேரம் ஆசிட் தழும்புகளும் தென்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். உண்மையிலேயே தர்மஸ்தலா கோவிலை சுற்றி பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டனவா என பலரும் கேள்வி எழுப்ப விவகாரம் கர்நாடகாவில் காட்டுத்தீயாகப்பரவியது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மஸ்தலா கிராமத்தின் நற்றவதி அற்றன்கரையில் புதைக்க பட்டதாக கூறப்படும் இடத்தில் சிறப்புபுறனாய்வு குழு ஆய்வு நடத்தியது அதனை தொடர்ந்து அற்றன்கரையில் புதைக்க பட்ட உடல்களை தோண்டும் பணியை கர்நாடகா காவல் துறை தொடங்கி உள்ளது. தர்மஸ்தலா கோலத்தை தவிர்த்து நற்றவதி ஆற்றிற்கு அருகில் ஒரு வனத்தில் 13 இடங்களில் குறிவைத்து உடல்களை தோண்டிஎடுக்கும் பணியை சிறப்பு புலனாய்வு குழு தொடங்கி உள்ளது.
பிற்பகல் 12:15 மணி அளவில் வனத்தில் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் முதல் இடத்தில் தோண்டும் பணி தொடக்கப்பட்டது. 2 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கபட்டனிலையில் தோண்டும் பணி நீண்ட நேரம் நீடித்தது கன மழை குறுக்கிட்டதில் தோண்டும் பணியில் சிக்கல் எழுந்தது இரண்டு அல்ல மூன்று அடி தோண்டுவதற்கு முன்பே தண்ணிர் தேங்கியதால் சுணக்கம் ஏற்பட்டது.
இருப்பினும் முதல் நாளில் இந்த உடலும் கண்டுஎடுக்க படவில்லை வழக்கின் சாட்சியாக இருக்கும் முன்னாள் ஊழியரையும் நேரில் அழைத்து வந்து உடல்கள் புதைக்கபட இடங்கள் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளன.தோண்டும் பணி முழுவதும் விடியோவாக பதிவு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தால் தர்மஸ்தலாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.