சோளிங்கர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
சோளிங்கர் : சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாசில்தார் செல்வி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுஜாதா முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் சேகர் வரவேற்றார். உதவி ஆணையர் (கலால்) ராஜ் குமார் கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருட்களின் அபாயம் குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கோட்ட கலால் அலுவலர் தேவராஜ், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன், விஏஓ கணேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.