தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழிங்கநல்லூர், ராயபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!!

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், ராயபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர், ராயபுரம் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம், வெற்றி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.

கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள். இன்னும் மக்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார். கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்க வேண்டும் உள்பட தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சந்திப்பின் போது நிர்வாகிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

 

Advertisement