கப்பல் கட்டுமான கழகத்தில் 52 காலிப்பணியிடங்கள்
மேற்குவங்கம், கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டுமான கழகம் மற்றும் இன்ஜினியர்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜர்னிமேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. ஜர்னிமேன் (கிரேன் ஆபரேட்டர்): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கிரேன் ஆபரேஷனில் முன் அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.
2. ஜர்னிமேன் (டீசல் மெக்கானிக்): 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் அல்லது மெக்கானிக் டீசல் அல்லது மெக்கானிக் (மரைன் டீசல்) டிரேடுகளில் ஏதாவது ஒன்றில் என்ஏசி/ என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. ஜர்னிமேன் (டிரைவர் மெட்டீரியல் ஹேண்டலிங்): 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1). தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கிரேன் ஆபரேஷனில் முன் அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.
4. ஜர்னிமேன் (எலக்ட்ரானிக் மெக்கானிக்): 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. ஜர்னிமேன் (எலக்ட்ரீசியன்): 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-1) தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. ஜர்னிமேன் (பிட்டர்): 10 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் பிட்டர்/வெப்பன் பிட்டர்/எம்எம்டிஎம் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7. ஜர்னிமேன் (மிஷினிஸ்ட்): 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் மிஷினிஸ்ட்/டர்னர்/ மிஷினிஸ்ட் (கிரைண்டர்) ஆகிய டிரேடுகளில் ஏதாவது ஒன்றில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. ஜர்னிமேன் (மிஷின் ஆபரேட்டர்): 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் மில்ரைட் மெக்கானிக்/எம்எம்டிஎம் ஆகிய டிரேடுகளில் ஏதாவது ஒன்றில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9. ஜர்னிமேன் (பைப் பிட்டர்) : 6 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் பைப் பிட்டர் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10. ஜர்னிமேன் (ரிக்கர்): 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1). தகுதி: மெட்ரிகுலேஷனுடன் தேர்ச்சியுடன் ரிக்கர்/கார்பென்டர் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
11. ஜர்னிமேன் (ஸ்ட்ரக்சுரல் பி்ட்டர்): 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1). தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் ஸ்ட்ரக்சுரல் பிட்டர்/பேப்ரிகேட்டர்/ஷீட் மெட்டல் வொர்க்/பிட்டர் ஆகிய டிரேடுகளில் ஏதேனும் ஒன்றில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.07.2025 தேதியின்படி 26க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். முதலாம் ஆண்டில் மாதம் ரூ.24 ஆயிரமும், 2ம் ஆண்டு ரூ.26 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் ரூ.19,900-3%-69,650 என்ற சம்பள விகிதத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
www.grse.in அல்லது https://jobapply.in/grse 2025 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2025.