‘SHEROES’ ஆப்
இரு பெண்கள் இணைந்தால் பேசக்கூடிய முக்கிய விஷயங்களே பேசத் தயங்கும் நிலைதான் இப்போதும் நிலவு கிறது. அதற்கு மிகச்சரியான தீர்வாகவே உள்ளது ஷீரோஸ் ஆப். பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும் சமூக வலைத்தள ஆப். 20மில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஆப்ளிகேஷன் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. SHEROES Inc. நிறுவனம் மூலம் செயல்படும் இந்த மொபைல் ஆப்ளிகேஷனுக்கு முகநூல், ட்விட்டர் போல் இணையதளமும் உள்ளன. பெண்கள் அவர்களின் பிரச்னைகள் அதற்கான நிபுணர்களின் தீர்வுகள், சட்ட ஆலோசகர்கள், உதவிகள் என கிடைக்கும் இந்த ஷீரோஸ் அத்துடன் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், அவர்களின் சுய தொழிலுக்கு உதவிகள் மேலும் தயாரிக்கும் பொருட்களுக்கு ஷீரோஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் என முழுமையான பெண்கள் உலகமாக இருக்கிறது ஷீரோஸ். பெண்கள் சார்ந்த சாதனைகள், செய்திகளும் கூட கிடைக்கும் இந்த ஆப் அவசர காலத்தில் பெண்களுக்கு உடன் வந்து உதவும்படியான SOS ஆப்ளிகேஷனாகவும் செயல்படுகிறது.