ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி!!
டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆக.31ம் தேதி பிரதமர் மோடி சீனா செல்கிறார். ஆக.30ம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா செல்கிறார். தியான்ஜின் நகரில் ஆக.31, செப்.1ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். 2020ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலால் இந்தியா-சீனா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு சீனா சென்றிருந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி செல்கிறார்.