செய்யாறு அருகே ஐயப்பன் கோயிலில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டு வழிபாடு
திருவண்ணாமலை: செய்யாறு வந்தவாசி சாலையில் புதிதாக அமைந்துள்ள ஐயப்பன் சுவாமி ஆலய மகா குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. செய்யாறு வந்தவாசி சாலையில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் விழா கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இக்கோயிலில் சிறப்பு என்னவென்றால் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலை போன்று வடிவமைக்க செய்யப்பட்டுள்ளது.
மேலும் இக்கோயில் ஐம்பொன் தகடுகளால் 18ஆம் படி அமைக்கப்பட்டு இப்படிகளில் இருமுடி செலுத்துவோர் மட்டுமே படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்ற கோயில் நிர்வாகமும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு ஐயப்பன் கோயிகள் இருந்தாலும் இக்கோயிலின் சிறப்பு சபரிமலை இருமுடி செலுத்தி கொண்டு 18ஆம் படி ஏறுவது போன்று இக்கோயில் வடிவமைக்கப்பட்டது. இக்கோயில் பரிவார மூர்த்திகளான விநாயர்கர், மஞ்சமாதா, கருப்பசாமி உள்ளிட்ட பிரகாரங்கள் தனித்தனியாக அமைந்துள்ளது. கோயில் கும்பாபிஷேகமானது சிவாச்சாரியார்கள் மற்றும் கேரள நம்பூதிரிகளால் பூஜை செய்யப்பட்டு. கோயில் முழுவதும் படி பூஜை செய்யப்பட்டது.
கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவை காண செய்யாறு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரி மாலையை அணிந்து கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு கலந்து கொண்டனர். செய்யாறு பகுதியில் கேரளாவில் உள்ள சபரி ஐயப்பன் போன்று இருமுடி செலுத்தி கொண்டு 18ஆம் படி கொண்டு சாமி தரிசனம் செய்வது இக்கோயிலில் சிறப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
