தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் புகாரில் பெங்களூரு ஐபிஎல் அணி வீரர் யாஷ் தயால் மீது வழக்குப் பதிவு

பாலியல் புகாரில் பெங்களூரு ஐபிஎல் அணி வீரர் யாஷ் தயால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் கொடுத்த புகாரில் யாஷ் தயால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement

ஐபிஎல் 18வது தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் (27) மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார் எனவும் ஊட்டிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன். ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

எனக்கு பணம் தந்து பிரச்னையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது" என இவ்வாறு புகாரில் அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாஷ் தயால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகழ் பெற்ற கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் புகார் கூறப்பட்டுள்ள விவகாரம், கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News