பாலியல் புகாரில் லலித்மோடி சகோதரர் ஏர்போர்ட்டில் கைது
புதுடெல்லி: முன்னாள் ஊழியர் அளித்த பாலியல் பலாத்கார புகாரில், பிரபல தொழிலதிபர் சமீர் மோடி டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பிரபல தொழிலதிபரும், தலைமறைவு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் சகோதரருமான சமீர் மோடி மீது, அவரிடம் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 10ஆம் தேதி பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருந்தார்.
Advertisement
இந்தப் புகாரின் அடிப்படையில், அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சமீர் மோடியை, காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
Advertisement